ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - The case of the Western Ghats

மதுரை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை மத்திய அரசு சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல மலைப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை தடைவிதிக்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சூழல் உணர்திறன்  சுற்றுச் சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலம்  மேற்கு தொடர்ச்சிமலை வழக்கு  உயர் நிதி மன்ற மதுரைக் கிளை  Sensitivity to the environment  Environmentally Sensitive Protection Zone  The case of the Western Ghats  Environmental sensitivity
The case of the Western Ghats
author img

By

Published : Apr 16, 2021, 8:01 AM IST

கன்னியாகுமரி திமுக எம்எல்ஏ எஸ். ஆஸ்டின், தோவாளையைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது, "மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை யுனெஸ்கோ பாரம்பரிய பகுதியாக அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வன சரணாலயம் உள்ளது. தற்போது மலைப்பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்காமல், சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல எல்லையை 3 கி.மீ. வரை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல எல்லையை 3 கி.மீ. என நிர்ணயம்செய்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில், ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது.

மக்களுக்கு உதவிடும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நீண்ட ஆலோசனை, விவாதத்திற்குப் பிறகே விதிகளைப் பின்பற்றி சூழலியலைப் பாதுகாத்திடும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் உள்ளிட்ட யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் மண்டல அளவிலான மாஸ்டர் பிளான் வெளியான பின் தங்களது குறைகளைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம். யூகத்தின் அடிப்படையில்தான் இந்த மனுக்கள் தாக்கலாகியுள்ளன.

எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்பதால் இந்த மனுக்கள் தள்ளுபடிசெய்யப்படுகின்றன என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை - கவியருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.