ETV Bharat / state

கண்மாயில் தகனமேடை அமைக்கத்தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி - மதுரை

சிவகாசி கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தகனமேடை அமைக்கத் தடை விதிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

தகனமேடை அமைக்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

author img

By

Published : Aug 16, 2022, 3:08 PM IST

மதுரை: சிவகாசி திருத்தங்கலைச்சேர்ந்தவர், பால்பாண்டி. இவர்,”சிவகாசி கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவில் நீர்நிலை உள்ளது. இது நீர்நிலைக் கண்மாய் விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.

இந்த நீர் நிலையில் ஆக்கிரமித்து, உள்ளாட்சி அமைப்பு சார்பில் தகன மேடை அமைக்க உள்ளனர். நீர் நிலையில் தகனமேடை அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் P.N.பிரகாஷ், மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்னையா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் நிலையை வகைபடுத்தவில்லை. அதற்கு முன்னதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல? எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சிவகளை அகழாய்வு: முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை திறக்கும் பணி தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.