ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி - madurai latest news

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக்கோரிய வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Sep 28, 2021, 4:56 PM IST

மதுரை : முகமது ரஸ்வி என்பவர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில் ”தற்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்துவரக்கூடிய சூழலில் சூதாட்ட விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. இதில் இளைஞர்கள் விளையாடி பணம் இழக்கின்றனர்.மேலும் சிலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர்.

எனவே இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். மேலும் இந்த சூதாட்டங்களில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்.28) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, துரைசுவாமி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் விளையாட்டுகள் என்பது தனிநபரின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இந்த விவகாரத்தில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்து உரிய நிவாரணம் தேடி இருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது நீதிமன்ற நேரத்தை வீணடிக்க கூடிய செயல் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க : வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.