ETV Bharat / state

வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை: நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தாசில்தாரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதி மன்ற மதுரைக் கிளை
உயர் நீதி மன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Oct 19, 2020, 10:18 PM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார். அதில், ”என் நிலத்தின் சர்வே எண்ணின் உள்ள தவறை சரிசெய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அதற்கு நீதிபதி எஸ். வைத்தியநாதன் உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்தார். அதாவது, ”வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காததினால் தான் தோனி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை அவரது பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். வருவாய்த் துறையிலிருந்து லஞ்சம் தொடங்குகிறது. வருவாய்த் துறையில் பணிபுரியும் பெரும்பாலான வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், பலர் ஆவணங்களை திருத்தம் செய்கின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவிக்கின்றனர்.

இதுபோன்று பதிவுத் துறையில் பெரும்பாலான மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள், ஊழியர்கள் செயல்படுகின்றனர். பதிவுத் துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது. லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர்.

மேலும் லஞ்சம், ஊழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கழகங்களில் பணிபுரியும் அதிகாரிகளை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் வருவாய் மற்றும் பத்திரப்பதிவுத்துறையுடன் சரிசமாக போட்டி போடுகின்றனர்.

இந்த வழக்கில் 2018இல் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆதார் எண், செல்போன் எண்ணை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு, இந்த விசாரணையை அடுத்த மாதம் 5.11.2020-க்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கந்து வட்டி கேட்டு மிரட்டல்: எஸ்பி-யிடம் தொழிலாளி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.