மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினருக்கு செய்யவேண்டிய ஒத்துழைப்பு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சியினை மதுரை மாவட்ட தீயணைப்புத் துறையினர் சார்பில் நடைபெற்றது.
இதில் வாகன விபத்துக்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, தீயினால் விபத்துகளுக்குள்ளானவர்களை எவ்வாறு மீட்பது, விபத்துக்குள்ளானவரை மீட்டு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்தை தீயணைப்புத் துறையினர் செய்துகாட்டினர். மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்பு கல்லூரிகளிலிருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!