ETV Bharat / state

'நாட்டுப்புற கலைகளுக்கு கல்லூரிகளில் வாய்ப்பு வழங்குக' - இயக்குநர் பா.ரஞ்சித் - இசை நிகழ்ச்சி குறித்து பேசிய பா ரஞ்சித்

நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித் தொடர்பான காணொலி

author img

By

Published : Dec 19, 2021, 9:09 AM IST

மதுரையில் 'மார்கழியில் மக்களிசை' என்ற தலைப்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம், ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “'மார்கழியில் மக்களிசை' பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியானது நேற்று (டிச. 18) மதுரையிலும், இன்று (டிசம்பர் 19)கோவையிலும் நடத்தப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித்

மங்கல, நாட்டுப்புற இசைகள் ஒன்றே

மேலும் இந்நிகழ்ச்சியானது வருகின்ற 24 முதல் 31ஆம் தேதிவரையிலான ஏழு நாட்களும் சென்னையில் பல்வேறு சபாக்களில் நடைபெறுகிறது. நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றும் முயற்சியாக இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம்.

மார்கழி என்பது தமிழ் மாதம், இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. மங்கல இசையும், நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தவைதான். நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விஷயங்களை இசை வடிவமாக கொண்டு வருவதுதான். இதனை அமைப்பாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது.

சினிமா இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பினைப் போன்று, மண் சார்ந்த இசைக்கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி ஆகும். நாட்டுப்புற இசையை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதுதான் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு.

கலைகளின் அடுத்த பரிமாணம்

இந்நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில், தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென் தமிழ்நாடு ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற இசையை மேடையேற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மக்களிடம் கலையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பளித்தால் அடுத்த பரிமாணத்தை அடையும். சமூக வலைதளங்களின் மூலமாக கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து -அனைத்து சாட்சிகளிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.