ETV Bharat / state

'நாங்கள் பட்டியலினத்தவர் அல்ல' - அனைத்து தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டணி அறிவிப்பு - தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டணி அறிவிப்பு

மதுரை: நாங்கள் இனிமேல் பட்டியல் இனத்தவர் அல்ல; இனி எங்கள் சமூகம் சார்ந்தவர்கள் பொதுத் தொகுதியில் தான் போட்டியிடுவார்கள் என்று அனைத்து தேவேந்திரகுல வேளாளர் சமூக கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

madurai
madurai
author img

By

Published : Mar 12, 2020, 7:24 PM IST

அரசியல் அதிகார அமைப்பு என்ற பெயரில் அனைத்து தேவேந்திரகுல வேளாளர் சமூக கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டணி சார்பாக மதுரை செய்தியாளர் அரங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களது சமூகத்தின் சுயமரியாதை கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒன்றுகூடி கூட்டணி அமைத்துச் செயல்படவிருக்கிறோம்.

இனிவரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடும் போது பொதுத் தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டும் என்ற உளவியல் சார்ந்த உறுதி மொழியோடு செயல்படவுள்ளோம். அது மட்டுமன்றி அனைத்து சமூகம், அரசியல் வன்மம் தவிர்த்து பிற சாதியினரோடு, அறிவார்ந்த நேர்மையான சமூக, கலாசார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம்.

தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டணி செய்தியாளர் சந்திப்பு

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தொகுதி, பொதுத் தொகுதி தவிர்த்து தேவேந்திர வேளாளர் சமூக மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் தேவேந்திரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ஒற்றுமையை நிலைநாட்டுவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலைக்கார பெண்ணை திருமணம் செய்: இளைஞரை மிரட்டும் மெளனிகா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.