மதுரை: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 60 சுற்றுலாப்பயணிகள், ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்ததைத் தொடர்ந்து அவர்கள் வந்த ரயில் பெட்டி மதுரையில் தீ விபத்துக்கு உள்ளானது. விபத்திற்கான காரணம் ரயிலில் எரிவாயு சிலிண்டர் உபயோகித்ததே எனக் கூறப்பட்டுள்ளது.
அதனை அடுத்து ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட விளக்க அறிக்கையில், ரயிலில் திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியதில் ரயில் பெட்டியில் தீ பிடித்து பரவியதாகவும், வேகமாக ரயிலில் இருந்து வெளியேறிய பயணிகள் தவிர்த்து சிலர் பெட்டியிலேயே சிக்கிக் கொண்டதாகவும், சட்டத்திற்கு விரோதமாக பயணிகள் ரயிலில் சிலிண்டர் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 9 பேர் இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறிய நிலையில், உயிரிழந்தோரின் அடிப்படை விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது உயிரிழந்த 9 பேரில் 6 நபர்களை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பரமேஸ்வர் டயத் குப்தா, தாமன்சிங் சந்துரு, ஹேமன் பன்வால், நிதிஷ் குமோரி, சாந்தி தேவி, மனோ வர்மா அகர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் விபத்தில் இறந்ததில் 5 ஆண்கள், 3 பெண்கள் என தெரியவந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாமல் இருந்த ஒருவரும் பெண் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: Madurai Train Fire Accident : 30 நிமிடத்திற்கு பின் வந்த தீயணைப்பு வாகனம்.. ரயில்வே அளித்த விளக்கம் இதுதான்!