ETV Bharat / state

850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாசியம்மன் கோயிலை பாதுகாக்க கோரிக்கை!

வெற்றிச் சின்னமாக சோழர்களால் கட்டப்பட்ட 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாசியம்மன் கோயிலை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாசியம்மன் கோயிலை பாதுகாக்க கோரிக்கை!
850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாசியம்மன் கோயிலை பாதுகாக்க கோரிக்கை!
author img

By

Published : Jan 4, 2023, 12:34 PM IST

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இயற்கைத் துறைமுகமான தொண்டி அருகில் இருக்கும் பாசிப்பட்டினம், கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது. இந்த ஊர் பாசியாற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இதன் கடற்கரை அருகில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோயில் உள்ளது.

கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் உள்ள இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், “இக்கோயில் விமானம் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் சாலை விமானமாக அமைந்துள்ளது.

விமானத்தின் அதிஷ்டானம் ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை என பாதபந்த அதிஷ்டானமாக அமைந்துள்ளது. அடுத்து வேதிகையும், இதன் மேல் அமைந்த பாதசுவரில் கோட்ட பஞ்சரங்களும், அரைத்தூண்களும், தேவகோட்டங்களும் காணப்படுகின்றன. பிரஸ்தரம் வரை முழுவதும் கருங்கற்கற்களாலும், அதற்கு மேல் தளம், கிரீவம், சிகரம் ஆகியவை செங்கல், சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டுள்ளன.

மதுரையை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்டு கொண்டிருந்த குலசேகரப் பாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செய்வதில் நடந்த போரின்போது, கி.பி1168இல் பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரம பாகுவின் படையும், குலசேகரப் பாண்டியனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ராஜாதிராஜ சோழன் படையும் தொண்டி பாசிபட்டினத்தில் போரிட்டதாக ஆர்ப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது.

இப்போரில் சோழர்கள் தோற்றனர். பின்பு நடந்த போர்களில் சிங்களப்படையை சோழர்கள் வென்றனர். சோழநாட்டின் எல்லையான சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது.

பாசியம்மன் கோயிலின் முன்புறத் தோற்றம்
பாசியம்மன் கோயிலின் முன்புறத் தோற்றம்

இப்பகுதிகளில் சோழநாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிங்களப்படையிடம் தோற்றுப்போன பாசிப்பட்டினத்தில், தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டுக்கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு ஒரு கோயிலை கி.பி.1168க்குப் பின் சோழர்கள் கட்டியுள்ளனர்.

850 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் மேற்பகுதியில் மரங்கள் வளர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையை கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.