தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 4) ஒரே நாளில் 5,063 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 6,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மதுரையில் இன்று 40 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,487ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 261ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 197 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் மதுரையில் கரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,954ஆக உயர்ந்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கையும் நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.