ETV Bharat / state

அந்தியோதயா ரயில் திருநெல்வேலி வரை இயக்கம் - நாகர்கோவில்

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் காரணமாக சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரயில் திருநெல்வேலி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்தியோதயா ரயில் திருநெல்வேலி வரை இயக்கம்

author img

By

Published : Mar 13, 2023, 8:20 PM IST

மதுரை: தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை அந்தியோதயா ரயில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக நாகர்கோவில் சென்றைடையும். அதேபோல் மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு தாம்பரம் வந்தடையும். அந்தியோதயா ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம் கோட்டப் பகுதியில் மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை தாம்பரத்தில் புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து வழக்கமான புறப்படும் நேரமான மாலை 05.05 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/ 22628) மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி ரயில் திருநெல்வேலி இருந்து வழக்கமான புறப்படும் நேரமான மதியம் 02.30 மணிக்கு புறப்படும்.

இதையும் படிங்க: மதுரை விமான நிலைய விவகாரத்தில் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.