ETV Bharat / state

பை சைக்கிள் பர்கர் - சுயதொழிலில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள் - pizza

மதுரை: பை சைக்கிள் பர்கர் என்ற பெயரில் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் முனைவோடு உணவுப் பிரியர்களை ஈர்க்கும் வகையில் தங்களின் கை பக்குவத்தால் தயாரித்த பர்கர்களை விற்பனை செய்து அசத்தி வருகின்றனர்.

madurai
author img

By

Published : Aug 6, 2019, 1:03 PM IST

படித்து முடித்து வேலைக்காக இளைஞர்கள் அலைந்து திரியும் இன்றைய கால கட்டத்தில் தன்னம்பிக்கையோடு,
மதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான அசோக் மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் சுயதொழில் செய்து தங்களது சவால் நிறைந்த வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சிறிய பை சைக்கிள் மூலமாக பர்கர் ஷாப் ஒன்றை உருவாக்கி மாலை வேளைகளில் வாடிக்கையாளர்களுக்கு நாவுக்கினிய சுவையில் உணவுப் பண்டங்களை வழங்கி தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

சுயதொழிலில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள்

மதுரை கே.கே. நகர் லேக் வியூ சாலையில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இந்த பை சைக்கிள் பர்கர் ஷாப்பில் கூட்டம் அலை மோதுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் இந்த கடைக்கு படையெடுப்பதை பார்க்க முடிகிறது. சுவை மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டி உணவு பண்டத்திற்கு பெரும்பாலானோர் தினசரி விரும்பிகளாகவும் மாறிப்போய்விட்டனர்.

இதுகுறித்து கௌதம் என்ற வாடிக்கையாளர் பேசிய போது, மதுரை மக்கள் எப்போதுமே வித்தியாசமான சுவை நிறைந்த உணவு வகைகளை விரும்பக்கூடியவர்கள் என்றும், பிற கடைகளை விட இந்த பை சைக்கிள் பர்கர் ஷாப்பில் குறைவான விலையில் தரமான சுவையில் பர்கர்கள் கிடைப்பதாக தெரிவித்தார்.

இந்த கடை உரிமையாளர்களில் ஒருவரான அசோக் பேசிய போது, சுயதொழில் செய்து தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வித்தியாசமான முயற்சியின் அடிப்படையில் இந்த பர்கர் ஷாப்பை தொடங்கியதாகவும், குறைவான பர்கர் வகை தான் என்றாலும் கூட அவற்றை சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தங்களது தலையாய நோக்கம் என்றார்.

இது பற்றி பேசிய மற்றொரு கடை உரிமையாளரான பூபாலன், படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த கால கட்டத்தில் ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததாகவும், பிறகு இந்த பர்கர் ஷாப்பை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும், குறைவான விலையில் தரமான சுவையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பை சைக்கிள் பர்கர் ஷாப்பை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தங்களது இந்த முயற்சிக்கு ஆதரவு வலுத்துள்ளதாகவும் தன்னம்பிக்கை இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Intro:பை சைக்கிள் பர்கர் - பட்டைய கிளப்பும் பட்டதாரி இளைஞர்கள்

பை சைக்கிள் பர்கர் என்ற பெயரில் மதுரையைச் சேர்ந்த 2 பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் முனைவோடு வித்தியாசமான உணவுப் பிரியர்களை தங்களின் அசத்தலான கை பக்குவத்தால் விதவிதமான பர்கர்களின் மூலம் ஈர்த்து வருகிறார்கள். Body:பை சைக்கிள் பர்கர் - பட்டைய கிளப்பும் பட்டதாரி இளைஞர்கள்

பை சைக்கிள் பர்கர் என்ற பெயரில் மதுரையைச் சேர்ந்த 2 பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் முனைவோடு வித்தியாசமான உணவுப் பிரியர்களை தங்களின் அசத்தலான கை பக்குவத்தால் விதவிதமான பர்கர்களின் மூலம் ஈர்த்து வருகிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான அசோக் மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் ஒரு சிறிய பை சைக்கிள் மூலமாக பர்கர் ஷாப் ஒன்றை உருவாக்கி மாலை நேரங்களில் களைகட்டும் விற்பனையோடு வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றனர்.

மதுரை கேகே நகர் லேக் வியூ ரோட்டில் மாலை 6 மணிக்கு மேல் விதவிதமான பர்கர்கள் மற்றும் நாவுக்கு வித்தியாசமான சுவை தரக்கூடிய சிற்றுண்டிகள் என அசத்துகின்றனர்.

இதுகுறித்து வாடிக்கையாளர் கௌதம் கூறுகையில்,; மதுரையை பொறுத்தவரை வித்தியாசமான உணவு வகைகளுக்கு மக்கள் எப்போதுமே ஆதரவு தருவார்கள் அதனை அடிப்படையாக வைத்து இந்த இளைஞர்கள் பைசைக்கிள் பர்கர் ஷாப் என்ற பெயரில் இதனை தொடங்கி இருக்கின்றனர் மற்ற பிற கடையோடு ஒப்பிடும் போது இங்கு பல்வேறு வகையான பர்கர் மிகக் குறைவான விலையில் மிக சுவையாக கிடைக்கிறது என்றார்

இக்கடையின் நிறுவனர்களில் ஒருவரும் பொறியியல் பட்டதாரியுமான அசோக் கூறுகையில்,;வித்தியாசமான முயற்சி அடிப்படையில்தான் இந்த பர்கர் ஷாப் ஐ தொடங்கினோம். குறைவான பர்கர் வகை தான் என்றாலும் கூட அவற்றை சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இங்கு தயாரிக்கப்படுகின்றன அனைத்துமே எங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டுவரப்படுகிறது மசாலா முதற்கொண்டு எவற்றையும் வெளியில் நாங்கள் வாங்குவதில்லை என்றார்

மற்றொரு இளைஞர் பூபாலன் கூறுகையில், கல்லூரி முடித்துவிட்டு வெறுமனே சுற்றிக் கொண்டிருந்த எங்களுக்கு ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்றும் என்ற எண்ணம் தோன்றியதற்கு பிறகு இந்த பர்கர் ஷாப் ஐ கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் துவங்கினோம். பர்கர் பீசா போன்றவை பெரிய பெரிய நிறுவனங்களில் தான் மக்கள் சென்று சாப்பிட முடியும் ஆனால் அவற்றின் விலை மிக அதிகம் ஆனால் குறைவான விலையில் தரமான சுவையில் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தப் பை சைக்கிள் கான்செப்ட்டை நாங்கள் உருவாக்கினோம். மக்களிடம் பெரிய ஆதரவு பெருகியுள்ளது என்றார்

வயது வித்தியாசமின்றி இங்கு அனைவரும் வந்து சாப்பிட்டு விட்டு செல்வது தான் பைசைக்கிள் பர்கர் ஷாப் இன் சாதனை அதேபோன்று ஃபுல்ஜார் சோடா என்ற சோடா பானத்தையும் வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து இந்த இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

மதுரை போன்ற இரண்டாம் தர நகரத்தில் இது போன்ற பட்டதாரி இளைஞர்களின் இந்த தொழில் முனைவு முயற்சி வரவேற்கத்தக்கது தானே

(I have sent two videos through mojo as same slug name following a and b)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.