ETV Bharat / state

தீபாவளிப்பண்டிகைக்கு அலைமோதும் கூட்டம்; திக்குமுக்காட வைக்கும் தியாகராய நகர்! - நார்த் உஸ்மான் சாலை

தீபாவளிப் பண்டிகைக்கு புத்தாடைகளை எடுக்க தியாகராய நகரில் அலைமோதும் கூட்டம், அலை கடலென திரண்டு வந்த பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தி நகரில் தீபாவளி பண்டிகைக்கு அலைமோதும் கூட்டம்

author img

By

Published : Oct 16, 2022, 8:02 PM IST

சென்னை: வருகிற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி புத்தாடைகளை எடுப்பதற்காக சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் கூட்டம், கடை திறந்த காலை நேரத்திலிருந்து முதலே அலைமோதி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பண்டிகைகளின்போது, புத்தாடைகளை எடுக்க பல மாவட்டங்களில் இருந்து சென்னை வராத பொதுமக்களும் இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருக்கக்கூடிய காரணத்தினால், பல மாவட்டங்களில் இருந்தும் வந்ததால், சென்னை - தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சானிடைசரால் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கரோனா தொற்று கட்டுப்பாடுகள் கடுமையாக இல்லாததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திகைத்து நின்றனர். அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளநிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சவுத் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, நார்த் உஸ்மான் சாலை, பாண்டி பஜார் எனப்பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அதே சமயத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மொத்தம் 100 காவலர்கள் தியாகராய நகர் சுற்றுவட்டாரத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி நகரில் தீபாவளி பண்டிகைக்கு அலைமோதும் கூட்டம்
தீபாவளிப்பண்டிகைக்கு அலைமோதும் கூட்டம்; திக்குமுக்காட வைக்கும் தியாகராய நகர்!

அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்குப்பயன்பெறும் வகையில் MAY I HELP YOU DESK போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஆட்டோ மற்றும் கார்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தியாகராய நகரில் ஆறு FRC கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக குற்றப்பிரிவு போலீசார் மஃப்டியில் உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக 50 கேமராக்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது எனவும்; ஏற்கெனவே உள்ள 250 கேமராக்களை சேர்த்து மொத்தம் 300 கேமராக்கள் மூலம் தியாகராய நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு அலைமோதும் கூட்டம்

மூன்று இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்காக சிறப்பு தள்ளுபடிகளும் அதிக புதிய ரகங்களும் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி - பாஜக ஆதரவாளர் ஃபாத்திமா அலி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.