ETV Bharat / state

கர்ப்பிணிக்கு கரோனா : உறவினர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரம் - covid 19 pregnant woman tests positive at Madurai

மதுரை : சமயநல்லூர் பகுதியில் ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது உறவினர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

covid-19-pregnant-woman-tests-positive-at-madurai

author img

By

Published : May 11, 2020, 4:50 PM IST

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான அர்ச்சனா, வழக்கமான மகப்பேறு சோதனைகள் மேற்கொள்ள அப்பகுதி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதில் இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அர்ச்சனா, அங்குள்ள கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அர்ச்சனாவின் உறவினர்களை தனிமைப்படுத்தும் பணிகளை சுகாதாரப் பணியாளர்களும், ஊர்மெச்சிகுளம் பகுதியில் தடுப்புகள் அமைத்து சாலைகளை மூடி, பாதுகாப்புப் பணிகளில் காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.