மதுரை: தமிழ்நாட்டில் புதிதாக இன்று (செப் 17) 5560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் இன்று (செப்.17) கரோனா வைரஸ் தொற்றால் 78 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,647ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் ஏற்கனவே 14 ஆயிரத்து 452 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 377 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.