ETV Bharat / state

மழை நீர் வடிகால் வழக்கு: ஆணையர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்படும் புதிய சாலைகளை மழை நீர் வடிகாலுடன் அமைக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழை நீர் வடிகால் வழக்கு
மழை நீர் வடிகால் வழக்கு
author img

By

Published : Sep 21, 2021, 6:13 AM IST

மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஐசக்பவுல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்படும் புதிய சாலைகளை மழை நீர் வடிகால், ஒப்பந்ததாரரின் விவரங்கள் அடங்கிய பலகைகள் ஆகியவற்றுடன் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு நேற்று (செப். 20) நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், "வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைச் செயலர், இயக்குநர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை ஆறு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.