தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து என்ற பாயாசம் (47). இவர் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளார்.
இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக பி சி ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த பேச்சிமுத்து கையெழுத்திடாமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருங்குளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேச்சிமுத்து கலந்து கொள்ள வருகிறார் என்ற தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்வதற்காக விரைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!
அப்போது அவரை கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளர்களும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கருங்குளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கருங்குளம் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பேச்சிமுத்துவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்