கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து கடந்த 2012ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தின்போது டிஎஸ்பிகளாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக்கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள டி. கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தார்.
இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகரசபைத் தலைவராகவும் இருந்த ஓ.ராஜா உள்பட பலர் மீது தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பூசாரி தற்கொலை செய்து கொண்டபோது டிஎஸ்பிகளாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக்கோரி தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கு குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ரூ.5 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க அமைச்சர் வேலுமணி கோரிக்கை