மதுரையைப் பொறுத்தவரை கரோனா தீநுண்மி தொற்றின் வேகம் தற்போது குறைந்துவருகிறது. கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஆக.28) மட்டும் மதுரையில் 103 பேர் தீநுண்மி தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 124 பேர் பூரண நலம் பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போதுவரை கரோனா தீநுண்மி தொற்றால் 13 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 570 பேர் சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 350 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை 868 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.