தமிழ்நாட்டில் இன்று(செப்.25) ஒரேநாளில் 5,679 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,69,370ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் இன்று(செப்.25) ஒரேநாளில் 71 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 15 ஆயிரத்து 117 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தற்போது 716பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பலனின்றி 383 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காரில் கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல்: இருவர் கைது