ETV Bharat / state

மதுரையில் 2 காவலர்களுக்கு கரோனா தொற்று

மதுரை: காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்கள் மதுரை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று
இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று
author img

By

Published : Apr 26, 2020, 12:22 PM IST

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக மதுரை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை 60 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

இதில் 37 பேருக்கு நோய் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே மீதம் உள்ள 23 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகவே கரோனா நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்வகையில் மருந்து மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவற்றை 10 நாள்களுக்கு தொடர்ந்து அருந்திவர வேண்டும் என்று தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநகரில் 2,500 காவலர்களும், புறநகர்ப் பகுதியில் 1,750 காவலர்களும் பணியில் உள்ளனர். இதுதவிர ஆயுதப்படை மைதானத்தில் ஐந்தாயிரம் காவலர்கள் பணியில் உள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.