கரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, வீதிகள் மற்றும் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், சாலைகளில் எஞ்சி இருக்கும் கரோனா தொற்று கிருமிகளை அளிப்பதற்காக சாலை முழுவதும் குளோரின் பவுடர் தூவும் பணிகளை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக மதுரை வில்லபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி முழுவதும், மாநகராட்சி ஊழியர்களால் குளோரின் பவுடர் தூவப்பட்டு வருகிறது.
இதற்காக ஊழியர்கள் பணியின் போது வெறும் கைகளாலும், முகக் கவசம் இன்றி கைக்குட்டைகளை முகத்தில் அணிந்தவாறு பணியாற்றும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அனைத்து தர மாநகராட்சி ஊழியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படாதவாறு, அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 50 ஆண்டுகால பழமையான சந்தை இடமாற்றம்