மதுரையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிதி நெருக்கடியை சந்திக்காமலிருக்க நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்பேரில் திருப்பரங்குன்றம் பகுதியில் குடும்ப அட்டைதாரர் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரூபாய் ஆயிரம் வழங்கும் பணி இன்று (ஜூன் 27) தொடங்கியது.
மதுரையில் உள்ள 100 மாநகராட்சிப் பகுதிகளிலும் மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி, பரவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது.
இங்கு வசிக்கும் நான்கு லட்சத்து 89 ஆயிரத்து 112 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மூன்று நாள்களுக்குள் நிவாரணத்தைக் கொடுத்து முடிக்கவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் மூன்று நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, வீடு வீடாகச் சென்று ரூபாய் ஆயிரத்தை வழங்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சை மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் இருக்கும் 20 உடல்கள்!