ETV Bharat / state

கரோனா தொற்று இல்லா மதுரையை உருவாக்க 6 அம்ச திட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் - corona camp

கரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாக்கிட 6 அம்ச திட்டங்களை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று இல்லா மதுரையை உருவாக்க 6 அம்ச திட்டம்

author img

By

Published : Jun 2, 2021, 7:08 AM IST

திருமங்கலம் தொகுதி புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியினை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
"நகர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வையும், நோயின் தாக்கத்தையும் அதன் விபரீதங்களையும் எடுத்து வைக்க வேண்டும் நோய்த்தடுப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும்.

பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். அரசின் கோவிட்19 வழிகாட்டு நெறிப்படி தேவையான சிகிச்சையை விரைவாக அளித்தால் குணமடைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்

தேவையான இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாமை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் இடங்களில் மக்கள் அதிகமாக வருவதை தடுக்கும் வகையில் முறையான நடவடிக்கை மேற்கொண்டும், அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று அனைத்து பகுதிகளில் பாரபட்சமின்றி வினியோகம் செய்ய வேண்டும்

கரோனா தொற்று இல்லா மதுரையை உருவாக்க 6 அம்ச திட்டம்
கரோனா தொற்று இல்லா மதுரையை உருவாக்க 6 அம்ச திட்டம்
ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களின் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை மருத்துவ உபகரணங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். அதேபோல் நோய் தொற்றாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் உயிரை பணயம் வைத்து முன்களபணி செய்து வருபவர்களுக்கும் தரமான உணவு வசதிகளை போதுமான அளவில் சரியான நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மேற்கண்ட 6 நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் கரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரை முதலிடத்தில் வந்துவிடும் என்பதை மதுரை மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்கரோனா முதல் அலையின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு 17 அமைப்புசாரா தொழிலாளர்கள், 14 நலவாரிய தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் உட்பட 35.65 லட்ச தொழிலாளர்களுக்கும் மற்றும்13.35 லட்ச மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதேபோல் முன்னாள் முதலமைச்சரும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கடந்த 19ஆம் தேதி தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரிய தொழிலாளர்களுக்கும் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆகவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் உடனடியாக நிவாரண உதவி மற்றும் உணவு பொருட்களை அரசு வழங்க வேண்டும்" என்று கூறினார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.