மதுரையைப் பொறுத்தவரை கரோனா தொற்றின் வேகம் தற்போது குறைந்துவருகிறது. கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆக. 26) மட்டும் மதுரையில் 31 பேர் தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 94 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போதுவரை கரோனா தொற்றால் 13 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 343 பேர் சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 341 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 937 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.