ETV Bharat / state

கோயில் திருவிழாவில் மோதல் - ஒருவர் பலி

மதுரை: கொடுக்கம்பட்டி கிராமத்தில் இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் போராட்டம்
author img

By

Published : Jun 18, 2019, 7:51 AM IST

மதுரை மாவட்டம், கொடுக்கம்பட்டி கிராமத்தில் நேற்று நடந்த திருவிழாவில் இருசமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்பு, தங்கையா, சுபாஷ், திவாகர் ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

உறவினர்கள் போராட்டம்

ஊர் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ராம்பு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இந்நிலையில் கலவரத்தில் தாக்கியவர்களை கைது செய்யக் கோரி இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலவரத்தால் கொடுக்கம்பட்டியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அதிகளவில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
17.07.2019

*மதுரை அருகே இரு சமூகத்தினரிடையே திருவிழாவின் போது மோதல் - ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி, மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை - உறவினர்கள் சாலை மறியல்*

மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடுக்கும் பட்டி என்ற கிராமத்தில் நேற்று இரவு நடந்த கோவில் திருவிழாவின் போது இரு சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது,

இந்த சம்பவத்தில் ஒரு தரப்பினர் எதிர் தரப்பினரை கடுமையான ஆயுதங்களையும் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதில் ரம்பு,தங்கையா,சுபாஷ், திவாகர் 4 பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,

இந்நிலையில் சிகிச்சை உள்ளவர்கள் பற்றிலவர்களின் நிலையை பற்றி உறவினர்களிடம் தெரிவிக்க மறுப்பதாகக் கூறி கொடுக்கும் பட்டியைச் சேர்ந்த கிராமத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனங்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தின்போது போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்பு சாலையின் ஓரமாக அமர்ந்தனர்,

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த ரம்பு பரிதாபமாக உயிரிழந்தார்,

மேலும் கொடுக்கப்பட்டு கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்,

இது மட்டுமில்லாமல் கோவில் திருவிழாவில் தாக்கியதாக 10 பேர் மீது 7 பிரிவின் கீழ் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் தேடி வருகிறார்கள்.

Visual sent in ftp
Visual name : TN_MDU_03_GH PROTEST NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.