ETV Bharat / state

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக: மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்! - மதுரை மாவட்டச் செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

withdraw three agricultural laws  su vengatesn protest
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல் போராட்டம்
author img

By

Published : Dec 4, 2020, 6:03 PM IST

மதுரை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்ட மசோதாக்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடசேன், " தன்னை ஒரு விவசாயி எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ஆதரித்துப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்

இந்தச் சட்டத்தையும், மின்சார திருத்தச் சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக மதுரையில் தொடர் போராட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்கும்வகையில், மதுரை காவல் துறை ஜனநாயகத்திற்குப் புறம்பாகவும், மனித உரிமைகளுக்கு மாறாகவும் செயல்படும்பட்சத்தில் தொடர்புடைய காவல் அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்" என்றார். ஆர்ப்பாட்டத்தில், மோடியின் உருவப் படம் எரிக்கப்பட்டதால், திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க: இந்தக் காலத்தில் இப்படியொருவரா? தோழர் நன்மாறன் குறித்து நெகிழும் ஆட்டோ ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.