ETV Bharat / state

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி முறை இருக்கவேண்டும் - 500 மரக்கன்றுகள் நடும் முயற்சி

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலும் இன்றைய கல்வி முறை இருக்கவேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

காமராசர் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்ட வகுப்பு துவக்க விழா
author img

By

Published : Sep 10, 2022, 8:06 AM IST

மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு முதல் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், அறிவியல் பிரிவுகளில் கணிதம் மற்றும் உளவியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் தொடக்க விழா நேற்றுந டைபெற்றது. சிறப்பு விருந்தினராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். முதலாமாண்டு இளங்கலை மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை அட்டை மற்றும் கையேட்டை வழங்கினார்.

அதன்பின் பேசிய அவர், "பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலும் இன்றைய கல்வி முறை இருக்கவேண்டும்" என்றார். அதோடு மாநில அரசின் கல்வித் திட்டங்களான "நான் முதல்வன், புதுமைப் பெண்" போன்ற திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றியும், அவை எவ்வாறு கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என்பது குறித்து விளக்கினார்.

இதையும் படிங்க: அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்... உயர் நீதிமன்ற மதுரக்கிளை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.