ETV Bharat / state

கோவை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசின் நிதியில் அமைக்க கோரிக்கை - அமைச்சர் சுப்பிரமணியன்! - union government

கோவை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மத்திய அரசின் நிதியில் செய்து தரக்கோரி மத்திய அமைச்சர் மாண்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

coimbatore-aiims-demand-to-set-up-union-government-fund-minister-subramanian
கோவை எய்ம்ஸ்: மத்திய அரசின் நிதியில் அமைக்க கோரிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்
author img

By

Published : Jul 23, 2023, 8:55 PM IST

Updated : Jul 23, 2023, 9:44 PM IST

Minister Ma. Subramanina Press Meet

மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மத்திய அரசின் நிதியில் இருந்து செய்து தரக்கோரி மத்திய அமைச்சர் மாண்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த தான கழகம் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 கிலோ மீட்டர் துார 'உதிரம்' மாரத்தான் போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இப்போட்டியை தொடங்கி வைக்க வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை மருத்துவ கல்லுாரியில் இருந்து காந்தி அருங்காட்சியகம் ராஜா முத்தையா மன்றம் மலர்ச் சந்தை தெப்பக்குளம் சந்திப்பு, வைகை கரை ரோடு வழியாக மீண்டும் மருத்துவக் கல்லுாரியை அடையும் வகையில் மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க : "என் தாய், தந்தை, குழந்தைகளுக்கும் மேலாக காட்பாடி தொகுதியை நேசிக்கிறேன்" - அமைச்சர் துரைமுருகன்!

தொடர்ந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரத்ததானம் செய்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை திறந்து வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகள் அடுத்த நிதியாண்டுக்குள் நிறைவேற்றப்படும். மதுரை இராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தென்னக மக்களுக்கு மிகச் சிறப்பான மருத்துவ சேவையை ஆற்றி வருகிறது.

60 வயதான நான் 70 முறைக்கு மேல் ரத்த தானம் செய்து உள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் ரத்த தானம் கொடுப்பதில் முதலிடத்தில் இருந்தது. தற்போது தமிழகம் பின்தங்கி மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. மீண்டும் ரத்த தானம் கொடுப்பதில் தமிழகம் முதலிடத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2 கோடியே 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரேடியோ ஃப்ரீகுவன்சி சாதனம் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் Computerrised blood donar app என்ற பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்கவும், குருதிக் கொடை தருபவர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம், தமிழக அரசின் சார்பாக 14 கோரிக்கைகள் தொடர்பான மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக தொடங்கிட வேண்டும். மத்திய அரசின் ஒருங்கிணைப்பில் குழப்பம் இருந்து உள்ளது. அதனால் நிதி ஒதுக்குவதில் பிரச்சனைகள் இருந்து உள்ளன.

மதுரை எய்ம்ஸ்க்கான டெண்டர் 2024க்குள் முடிந்துவிடும். மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர். 2028க்குள் எய்ம்ஸ் வர வாய்ப்புள்ளது. கோவை வளர்ந்து வரும் நகரம். கோவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜைகா நிதி உதவி இல்லாமல் மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்க டேராடூன் மாநாட்டில் மத்திய அமைச்சரிடம் கோரியுள்ளோம்.

மதுரை எய்ம்ஸ்க்கு மத்திய அரசும் அப்போதைய ஆட்சியாளர்களும் கவனம் செலுத்தாமல் ஜைகா மூலம் நிதி ஒதுக்கியதால் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாகின்றன. எதிர்காலத்தில் நிச்சயமாக மத்திய அரசு நிதி பங்களிப்பில் கோவை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெறும் என நம்புகிறோம்.

மதுரை எய்ம்ஸ்க்கான நிதி பங்களிப்பை மத்திய அரசு கொடுத்திருந்தால் நிச்சயம் அடிக்கல் நாட்டும் பணியோடு நின்று இருக்காது" என்றார். நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள் எதிரி என ஆளுநர் ரவி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஆளுநரை தான் எதிரியாக பார்க்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: CM Stalin letter: வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்!: தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்!

Last Updated : Jul 23, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.