ETV Bharat / state

'நடிகர்கள் சொந்தக் கருத்துகளை பேசுவதில்லை..!' - ஹெச். ராஜா விமர்சனம் - national education policy 2019

மதுரை: "தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரோ சொல்லித்தான் நடிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு சொந்தக் கருத்து இல்லை" என்று, ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

h.raja
author img

By

Published : Jul 22, 2019, 6:55 PM IST

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தேசிய கல்விக் கொள்கை என்பது ஏற்கனவே உள்ளது. இதனை குறித்து யாரோ சொல்லிதான் நடிகர்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு என சொந்தக் கருத்து இல்லை. திமுகவினர் சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்திக்கொண்டு மும்மொழி குறித்து பேசிவருகிறார்கள். திமுகவினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளியில்தான் பயில்கிறார்கள். திமுகவினர் ஏழைகளின் எதிரியாகச் செயல்படுகிறார்கள்.

திமுக என்பது புளுகு மூட்டைகளின் கூடாரமாக உள்ளது. அத்திவரதர் தரிசனத்தில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கு முதியவர்கள் தரிசனத்திற்கு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்து அறநிலையத்துறை என்பது இந்து அறத்தையே அழித்து வருகிறது. அத்திவரதர் தரிசனத்தின்போது காவல்துறை பணிகளில் இந்துக்களுக்கு எதிரான கொள்கை கொண்ட காவலர்களை நியமிப்பதை அரசு தடுக்க வேண்டும்," என்றார்.

Intro:திமுக புளுகு மூட்டைகளின் கூடாரம் - எச் ராஜா குற்றச்சாட்டு

தேசிய கல்வி கொள்கை குறித்து யாரோ சொல்லிதான் நடிகர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர், திமுக புளுகுமூட்டைகளின் கூடாரம், இந்து அறநிலையத்துறை இந்து அறத்தை அழித்துவருகிறது என ஹெச்.ராஜா பேட்டி.
Body:திமுக புளுகு மூட்டைகளின் கூடாரம் - எச் ராஜா குற்றச்சாட்டு

தேசிய கல்வி கொள்கை குறித்து யாரோ சொல்லிதான் நடிகர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர், திமுக புளுகுமூட்டைகளின் கூடாரம், இந்து அறநிலையத்துறை இந்து அறத்தை அழித்துவருகிறது என ஹெச்.ராஜா பேட்டி.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேசிய கல்விகொள்கை என்பது ஏற்கனவே உள்ளது, திமுகவினர் சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்திகொண்டு மும்மொழி குறித்து பேசிவருகிறார்கள். திமுகவினர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனியார் பள்ளியில் தான் பயில்கிறார்கள்.திமுகவினர் ஏழைகளின் எதிரியாக செயல்படுகிறார்கள். திமுக என்பது புளுகுமூட்டைகளின் கூடாரமாக உள்ளது.

அத்திவரதர் தரிசனத்தில் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு முதியவர்கள் தரிசனத்திற்கு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. இந்து அறநிலையத்துறை இந்து அறத்தை அ அழித்து வருகிறது. அத்திவரதர் தரிசனத்தின்போது காவல்துறை பணிகளில் இந்துக்களுக்கு எதிரான கொள்கை கொண்ட காவலர்கள் நியமிப்பதை அரசு தடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.