ETV Bharat / state

தேனூர் மண்டபத்தை சுற்றி வந்த அழகர் : கிராமத்தார் மகிழ்ச்சி - மீனாட்சி அம்மன் திருகல்யாணம்

மதுரை: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுரை வண்டியூரிலுள்ள தேனூர் மண்டபத்தைக் கள்ளழகர் மூன்று முறை வலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று தேனூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அழகர்
author img

By

Published : Apr 21, 2019, 8:31 PM IST

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாரைக்கு முக்தியளிக்கும் வைபோகம், மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு தேனூர் கிராம இளைஞர்கள் தெரிவித்தாவது, 'கடந்த சில ஆண்டுகளாக, தேனூர் மண்டபத்தில் சித்திரைத் திருவிழாவிற்கான பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது.

இதற்காகப் பலமுறை அழகர் கோவில் நிர்வாக அலுவலருக்கும், இந்து சமய அறநிலையத்துறையினரிடமும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் முறையான நடவடிக்கை எடுக்கபடவில்லை.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்கு முக்கிய காரணமே தேனூர் மக்கள்தான். ஆகையால், தேனூர் மண்டபத்தை அழகர் மூன்று முறை வலம் வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தோம்.

அதனடிப்படையில் நீதியரசர்கள், தேனூர் மண்டபத்தின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன் காரணமாக, தேனூர் மண்டபத்தை அழகர் மூன்று முறை சுற்றி வலம் வந்தார்.

தேனூர் மண்டபத்தை சுற்றி வந்த அழகர்

மேலும், பல்வேறு பாரம்பரிய நடைமுறைகளை வருமாண்டுகளில் கடைப்பிடிக்கத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன், அதற்குரிய கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய முறையில் தெரிவிப்போம்' என்றனர்.

தேனூர் மண்டபத்தை பாரம்பரிய வழக்கப்படி அழகர் சுற்றி வந்தது மகிழ்ச்சி - கிராமத்தார் மகிழ்ச்சி

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுரை வண்டியூரிலுள்ள தேனூர் மண்டபத்தை கள்ளழகர் மூன்று முறை வலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று தேனூர் கிராமத்தார் பேட்டி.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாரைக்கு முக்தியளிக்கும் வைபோகம், மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு தேனூர் கிராம இளைஞர்கள் சார்பாக, தேனூர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைக் குமரன் பேசுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக, தேனூர் மண்டபத்தில் சித்திரைத் திருவிழாவிற்கான பாரம்பரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது.

இதற்காக பலமுறை அழகர் கோவில் நிர்வாக அலுவலருக்கும் இந்து சமய அறநிலையத்துறையிடமும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் முறையான நடவடிக்கை இல்லை.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்கு முக்கிய காரணமே தேனூர் மக்கள்தான். ஆகையால், தேனூர் மண்டபத்தை அழகர் மூன்று முறை வலம் வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நடைமுறைகளை மீண்டும் வலியுறுத்தி கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தோம்.

அந்த அடிப்படையில் நீதியரசர்கள், தேனூர் மண்டபத்தின் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன் காரணமாக, இன்றைய தினம் தேனூர் மண்டபத்தை அழகர் மூன்று முறை வலம் வந்தார்.

மேலும் பல்வேறு பாரம்பரிய நடைமுறைகளை வருமாண்டுகளில் கடைப்பிடிக்க தொடர்ந்து வலியுறத்துவதுடன், அதற்குரிய கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய முறையில் தெரிவிப்போம்' என்றார்.

(இதற்குரிய வீடியோ TN_MDU_05_20_AZHAGAR_THENOOR_MANDAPAM_SCRIPT_9025391) என்ற பெயரில் மோஜோ மூலமாக அனுப்பப்பட்டுள்ளது)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.