ETV Bharat / state

சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை

கீழடியின் பெருமையை சீன நாட்டின் யுன்னான் மின்சூ பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் கிக்கி ஜாங் தனது மாணவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

chinasee-teacher-teach-about-keezhadi-for-his-students
சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை
author img

By

Published : Sep 3, 2021, 10:01 AM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடியில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று வருகிறது. மேலும், அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் போன்ற பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஓராண்டுக்கு முன்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிற்சி ஒன்றில் சீன நாட்டின் யுன்னான் மின்சூ பல்கலைக்கழக தமிழ் துறையில் பணியாற்றும் கிக்கி ஜாங் என்ற நிறைமதி பங்கேற்றிருந்தார்.

சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை

அவர், கீழடி அகழாய்வு களத்திற்கும், உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருக்கும் வருகை தந்து பார்வையிட்டார். இந்நிலையில், தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பெருமை குறித்து பாடம் எடுத்ததாக மிகப் பெருமையுடன் தனது முகநூலில் அவர் பகிர்ந்துள்ளார். இதன்மூலம், கீழடியின் பெருமை சீன நாட்டு மாணவர்களிடமும் சென்று சேர்ந்துள்ளது தெரியவருகிறது.

இதையும் படிங்க: கீழடியில் பிரபல நாட்டியக் கலைஞர் நடனம் - காணொலி வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.