மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி செல்லும் வயதிலுள்ள தங்களின் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, நேற்று (ஜூன் 16) மதுரை பாண்டி கோவில் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமிக்கு பெற்றோர் திருமணம் செய்ய வைக்க முயன்ற நிலையில் அந்தச் சிறுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 44 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. அதில், 36 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், எட்டு திருமணங்கள் நடைபெற்று முடிந்த பின்னர் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 123 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சமூக துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குழந்தை திருமணம் செய்வோரும் அதற்கு உடந்தையாக இருக்கும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது!