மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விளாச்சேரி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மகன் கிருஷ்ணகுமார் (27). இவருக்கும் மேல உரப்பனூர் சிவன்ராஜ் என்பவரது மகளுக்கும் (16) நேற்று விளாச்சேரி பகுதியில் திருமணம் நடைபெற்றது.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் சமூகநலத் துறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ணத்திற்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் மணமகன் கிருஷ்ணகுமார் (27), மணமகளின் தந்தை சிவன்ராஜ் (42), தாய் கவிதா (38), மணமகன் தந்தை தர்மர் (58), தாய் கழுவாய் (52) ஆகிய ஐந்து பேர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், திருமணமான சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர்.