மதுரை ராணி மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "மத்திய சமூக நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ADIP திட்டத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கு கணக்கெடுப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன".
மேலும் பேசிய அவர், "மத்திய அரசு சமூக நலத்துறை அமைச்சரிடம் அளித்துள்ள வேண்டுகோளின் படி, மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் நாளை (பிப். 18) முதல் 25ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பிற்கு பிறகு உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தார்வார்சந்த் கெலாட் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம். மதுரை மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 48 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி அவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரமாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் மாணவர்களை போலீஸ் மூர்க்கத்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு