ETV Bharat / state

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மணல் அள்ள தடை விதிக்க கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்! - காவிரி டெல்டா மாவட்டங்கள்

மதுரை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களில் மணல் குவாரியை தடை செய்ய கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 30, 2020, 7:07 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்” காவிரி டெல்டா மாவட்டங்கள் அரிசி விவசாயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அமைந்திருக்கும் மாவட்டத்தில் விவசாயத்திற்கு எதிரான வேலைகள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பிரச்னையாக சட்டத்திற்குப் புறம்பாக மணல் திருட்டு மற்றும் அனுமதி பெற்று மணல் அள்ளுவது இருந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள பூதலூர் தாலுக்காவில் சுக்கம்பர், கோவில்ஆடி, களபெரம்பலூர், விண்ணமங்கலம், ஒரத்தூர் மற்றும் திருவையாறு தாலுகாவில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு மணல் திருட்டு நடைபெற்றுவருகின்றன. இதனை வருவாய் மற்றும் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை.

பூதலூர் தாலுகாவில் உள்ள திருச்சென்னம்பூண்டி பகுதியில் அரசு அளித்துள்ள விதிகளை மீறி பல இடங்களில் அதிகளவு ஆழங்களுக்கு மணல் தோண்டப்படுகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அறிவிக்கப்பட்ட இடங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருகிறது. இதனால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்கு அதிகளவு சோதனைச் சாவடிகள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும்.மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மணல் குவாரிகள் செயல்படுவதற்கான தடை விதிக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.