ETV Bharat / state

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் லுக் அவுட் நோட்டீஸ் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை! - இன்றைய முக்கிய செய்திகள்

SP Udayakumar lookout notice Case: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

SP Udayakumar lookout notice Case
சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 2:22 PM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த சுப.உதயகுமார் தனக்கு எதிராக வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நெல்லை மாவட்டத்தின் கடலோர மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அந்த வகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்கள் மாதக் கணக்கில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நான் அணுசக்தி எதிர்ப்பு குழு என்ற அமைப்பு மூலம் மக்களை ஒன்று திரட்டி அணு உலைக்கு எதிராகவும், அணு சக்தி கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகிறேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதும், என் மீதும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட நடவடிக்கைகளைப் பரிசீலித்து திரும்பெற அறிவுறுத்தப்பட்டது.

வழக்குகளை நீதிமன்றம் திரும்பப் பெற வழிகாட்டுதல்கள் வழங்கிய பிறகும் கூட, வழக்குகளைத் திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் 2022ஆம் அண்டு துருக்கி நாட்டில் நடைபெறக்கூடிய இதழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது.

இதனால் எனக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நான் மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்கு விண்ணப்பித்தபோது எனக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருப்பது தெரியவந்தது. எனவே எனக்கு எதிரான வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கையை திரும்பெற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தது குறித்து திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி இரண்டு வாரத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று (செப் 05) இந்த வழக்கு நீதிபதி நாகார்ஜுன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர், கடந்த 2013 ஆண்டு அரசு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. மனுதாரர் மீது 26 வழக்குகள் உள்ள நிலையில் தற்போது 15 வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் சுப.உதயகுமார் மீது நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் எதுவும் நிலுவையில் இல்லை என்பது தெரிய வருகிறது. மேலும் மனுதாரர் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். எனவே மனுதாரருக்கு கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணாப்பளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சனாதன சர்ச்சை கருத்து விவகாரம்... அமைச்சர் உதயநிதி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.