ETV Bharat / state

காலணியால் தாக்கிக் கொண்ட டிக் டாக் பிரபலங்கள்! - செருப்பால் அடி

மதுரை: டிக் டாக் பிரபலங்களான சிக்கந்தர், சூர்யா தேவி ஆகியோர் ஒருவரையொருவர் காலணியால் தாக்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Tik tok fame surya devi
டிக் டாக் பிரபலங்கள்
author img

By

Published : Aug 7, 2021, 1:40 PM IST

மதுரை: சுப்பிரமணியபுரம் சந்தைப் பகுதியில் வசித்துவருபவர் டிக் டாக் பிரபலம் சிக்கா என்ற சிக்கந்தர். இவர் கடந்த 2ஆம் தேதி தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி தனது ஆண் நண்பருடன் சிக்கந்தரை காலணியால் தாக்கியுள்ளார். அத்துடன் அதைக் காணொலியாகப் பதிவு செய்து தனது யூ-ட்யூப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

புகார்

கடந்த சில நாள்களாக சிக்கந்தர், சூர்யா தேவி இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சூர்யா தேவியின் இத்தாக்குதல் சிக்கந்தருக்கு அவமானத்தை ஏற்படுத்தவே, சூர்யா தன்னை தாக்கியதோடு தொடர்ச்சியாக தனது ஆண் நண்பர் மூலமாக கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் சூர்யா தேவி மீது நான்கு பிரிவுகளின்கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, சூர்யாதேவியுடன் வந்த ஆண் நண்பரையும் தேடிவருகின்றனர்.

காலணியால் தாக்கிக்கொண்ட டிக் டாக் பிரபலங்கள்!

இதனிடையே சிக்கந்தரும், சூர்யாதேவியும், காலணியால் மாறி மாறி தாக்கிக்கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இது போன்ற ஆபாச பேச்சுகள், காணொலிகளைப் பதிவிடும் நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மலைப்பாம்பை துன்புறுத்தி டிக்-டாக்: 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.