கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், கடந்த 2017இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தனர். இதில், தமிழ்நாடு அரசையும், அலுவலர்களையும் விமர்சித்து ஓவியர் பாலா(எ) பாலமுருகன் (44) என்பவர் கார்ட்டூன் படம் வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதையடுத்து பாலா மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் திருநெல்வேலி ஜே.எம்.1 நீதிமன்றம் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது. இதில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில், நீதிபதி இளங்கோவன் முன் இவ்வழக்கு இன்று (ஏப். 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , பாலா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கு அனுமதி இல்லை’ - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை