மதுரை டி.பி.கே. ரோடு பகுதியில் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வாசலில் சொகுசு கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த காரை ஒரு இளைஞர் கள்ளச்சாவி மூலம் திருட முயன்றுள்ளார். இதனைக் கவனித்த காவலர், மற்ற காவல் துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். பின்னர், அந்த இளைஞனைச் சுற்றி வளைத்த காவல் துறையினர், அவரை மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து இளைஞனிடம் விசாரணை செய்த காவல் துறையினர், இளைஞன் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பது தெரிய வந்தது.
விசாரணையில் மது கடத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக இந்த காரை திருட முயன்றதாக பிடிபட்ட இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன்கள் திருட்டு: டிக்டாக் செய்து போலீஸிடம் சிக்கிய திருடர்கள்!