ETV Bharat / state

ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மரணம் - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: ஆம்னி வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
author img

By

Published : Apr 28, 2021, 7:11 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர்கள் அபுபக்கர் சித்திக் (55), சகர் பானு (50). இத்தம்பதியின் பிள்ளைகள் மூன்று மகள்கள், ஒரு மகன். இரண்டாவது மகள் நஸ்ரின் பாத்திமா (25) என்பவருக்குத் திருமணம் முடிந்து, ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது.

சிவகாசியில் உள்ள நஸ்ரின் பாத்திமாவின் கணவர் வீட்டிற்கு, நஸ்ரின் பாத்திமா, அவரது குழந்தை, அபுபக்கர் சித்திக், சகர் பானு, மகள் ஷிபா (18), மகன் சாகுல் (20) ஆகியோர் ஆம்னி வேனில் சென்றனர்.

கள்ளிக்குடி மையிட்டான்பட்டி பிரிவு அருகே விருதுநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கிவந்த காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார், ஆம்னி வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் அபுபக்கர் சித்திக், சகர் பானு, நஸ்ரின் பாத்திமா, ஷிபா, சாகுல் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டிவந்த கவுதம் என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்து விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து :சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.