ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் - மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி - மதுரைக்கு மெட்ரோ ரயில்

மதுரை : நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி காட்டுவேன் என மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் உறுதியளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர்
author img

By

Published : Mar 30, 2019, 7:15 PM IST

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்துக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் வெங்கடேசன் கூறியதாவது, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றால் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சியையும்மேற்கொள்வேன்.

மேலும்கீழடி மட்டுமன்றி கீழடி சுற்றியுள்ள மாரநாடு கொந்தகை, அல்லிநகரம் போன்ற அனைத்து ஊர்களிலும் தமிழின், தமிழர்களின் தொன்மை புதைந்து கிடக்கிறது, அவற்றையெல்லாம் வெளிக்கொணர்ந்து தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Intro:மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற சு வெங்கடேசன் தான் வெற்றி பெற்றால் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி காட்டுவேன் என்று உறுதி அளித்தார்

Body:மதுரையில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார்

அப்போது மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு வெங்கடேசன் உடனிருந்தார் தோழமை கட்சிகளான திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்

பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன் தற்போது மதுரையில் அமைக்கப்பட உள்ள பறக்கும் பாலம் திட்டத்திற்கான மதிப்பீட்டில் சற்று அதிக அளவு தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆகும் அதற்கான சாத்தியக்கூறுகள் மதுரையில் உண்டு மேலும் வரலாறு வளர்ச்சி நவீனம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மதுரையை மேம்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளது

நாடாளுமன்றத்தில் எனது முதல் குரலாக மதுரையை இனத்துவ பாரம்பரிய மிக்க நகரமாக அறிவிக்க முதல் முயற்சி மேற்கொள்வேன் இதன் மூலம் மதுரை தொகுதிக்கு பல்வேறு வகையிலும் நிதி உதவி வந்து சேரும் அதனைக் கொண்டு மதுரையின் வரலாற்றுப் பெருமையை நிறுவுவதோடு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆவன செய்வேன்

கீழடி மட்டுமன்றி கீழடி சுற்றியுள்ள மாரநாடு கொந்தகை அல்லிநகரம் போன்ற அனைத்து ஊர்களிலும் தமிழின் தமிழர்களின் தொன்மை புதைந்து கிடக்கிறது அவற்றையெல்லாம் வெளிக்கொணர்ந்து தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்வேன்

அதைப் போன்று மதுரையில் உள்ள தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு மதுரையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதியை தொழிற்சாலை வளாகமாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த கூட அதற்கான எந்த செயல்பாடுகளும் தொடங்கப்படவில்லை நாங்கள் அதனை நிறைவேற்றுவோம்

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு தரத்திற்கு உயர்த்தி பல்வேறு நாடுகளில் இருந்தும் மதுரைக்கு விமானங்கள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்துவோம் அதேபோன்று மதுரை நகருக்குள் இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் மேம்படுத்தவும் மேலும் நவீனமாகவும் உருவாக்க முயற்சி மேற்கொள்வோம்

எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் சாத்தியக்கூறு உள்ள அனைத்து திட்டங்களையும் நாங்கள் முன்மொழிந்துள்ளார் மதுரையை சுற்றியுள்ள விவசாய வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகள் அமைக்க முயற்சி மேற்கொள்வது எங்களது முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.