ETV Bharat / state

அஞ்சலக சேமிப்புக்கான தவணைக் கெடு: காலநீட்டிப்பு கோரி சு.வெங்கடேசன் கடிதம்!

மதுரை: அஞ்சல் சிறுசேமிப்புகளுக்கான தவணைக் கெடுவிற்கு கால நீட்டிப்பு கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author img

By

Published : May 26, 2021, 8:44 PM IST

அஞ்சலக சேமிப்புக்கான அபராத தொகை ரத்து
அஞ்சலக சேமிப்புக்கான அபராத தொகை ரத்து

இது குறித்து இன்று (மே.26) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை.

இ‌ந்த அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள், (Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA)) - தவணைகளுக்கு காலக்கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகை உண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது.

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச்சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்குக் கால நீட்டிப்பு தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. (பார்வைக்கு - எப். எண் 113-03/2017- SB / தேதி 31.03.2020 - இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம், அ‌ஞ்ச‌ல் துறை).

இந்த ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகள் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கில் உள்ளன.

ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி ஆகியவற்றை உடனே அறிவிக்குமாறு அக்கடிதத்தில் கோரியுள்ளேன்.

ஒன்றிய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.