மதுரை சிம்மக்கல் அருகே மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சசி (37). இவர் தனியார் கேபிள் நிறுவனத்தின் லைன்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (செப்.21) காலை அரசரடி பகுதியில் கேபிளில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் ஏறியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கஞ்சாவுடன் பிரபல ரவுடி கைது!