ETV Bharat / state

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை - மதுரை மாவட்ட செய்திகள்

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

பேருந்து போக்குவரத்து
பேருந்து போக்குவரத்து
author img

By

Published : Jun 28, 2021, 10:00 AM IST

Updated : Jun 28, 2021, 10:07 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருவதையொட்டி, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்றுமுதல் (ஜூன் 28) 27 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பொது போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்ட 11 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரையிலிருந்து 714 நகரப் பேருந்துகள், 120 புறநகர்ப் பேருந்துகள் என மொத்தமாக 834 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடங்கிய பேருந்து சேவை

மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்தைக் கண்காணிக்கச் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழித்தடத்திலும் மக்கள் வரத்தின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை கோட்ட 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தேசிய விருது!

Last Updated : Jun 28, 2021, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.