ETV Bharat / state

'மதுரையில் மீண்டும் மற்றொரு பெண் சிசுக் கொலையா' - நடந்தது என்ன? - பெண் சிசுக் கொலை

மதுரை: உசிலம்பட்டி அருகே பிறந்து 20 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழந்ததை அடுத்து, குழந்தையின் பெற்றோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

baby death at madhurai
born baby death at madhurai
author img

By

Published : Mar 6, 2020, 5:38 PM IST

Updated : Mar 6, 2020, 6:01 PM IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜெயபாண்டி - பவித்ரா தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த பிப்-18ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த 20 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி, செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் கொண்டு சென்ற சூழலில், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமறிந்து விரைந்து வந்த வாலாந்தூர் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்து 20 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழப்பு

முதற்கட்ட விசாரணையில் குழந்தை பிறந்தது முதலே மூக்கில் நீர் வடிந்து கொண்டிருந்ததாகவும் அதற்கு குழந்தையின் தந்தை ஜெயபாண்டி பல இடங்களில் மருத்துவம் பார்த்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் பெண் சிசு உயிரிழந்தது தொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!

Last Updated : Mar 6, 2020, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.