ETV Bharat / state

தமிழ்நாடு அரசியலிலேயே இடம்பெறாத கட்சிகள் வன்முறையில் ஈடுபடுகிறது: பாஜக முருகன்!

author img

By

Published : Oct 27, 2020, 8:40 PM IST

மதுரை: தமிழ்நாடு அரசியலிலேயே இடம்பெறாத அரசியல் கட்சியினர் திட்டமிட்டே வன்முறைகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றது என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

BJP state President about VCK protest
BJP state President about VCK protest

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், '' தமிழ்நாடு மகளிரை இழிவாக பேசியவர்களை கண்டித்து பாஜக மாநில நிர்வாகிகள் அறவழியில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது.

அதேபோன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு, அறவழியில் போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது. இவ்வாறு பாகுபாடு காட்டும் தமிழக அரசை பாஜக கண்டிக்கிறோம்.

பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர் சந்திப்பு

இன்றைக்கு தமிழ்நாட்டில் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கும் கூட்டத்துக்கு எதிர்கட்சியும் துணை நிற்கிறது. சில காலங்களாக தமிழ்நாடு அரசியலில் இடம்பெறாத அரசியல் கட்சியினர் திட்டமிட்டே வன்முறைகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றது. அவர்களை காவல்துறை கைது செய்யவேண்டும். சட்டஒழுங்கை சீர்குலைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடைவெடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு'' என்றார்.

இதையும் படிங்க: நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக் கொடி ஏற்றுங்கள்: சீமானின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.