ETV Bharat / state

செப். 10 முதல் கேரளாவில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி - ராமர் பிள்ளை அறிவிப்பு! - bio petrol

மதுரை: கேரளாவில் வருகின்ற 10ஆம் தேதிமுதல் மூலிகை பெட்ரோல் உற்பத்தி தொடங்கும் எனவும் தமிழ்நாட்டில் ரூ. 20-க்கு ஒரு லிட்டர் பெட்ரோலைத் தரமுடியும் எனவும் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை
author img

By

Published : Sep 5, 2020, 7:00 AM IST

கழிவுநீர் மூலமும், விவசாய கழிவுகளைக் கொண்டும் உயிரி டீசல், உயிரி பெட்ரோல், உயிரி சமையல் எரிவாயு தயாரித்ததாகக் கூறும் ராமர் பிள்ளை மதுரையில் செய்தியாளர்களை நேற்று (செப்டம்பர் 4) சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கேரளா அரசு மூணாறு பகுதியில் 1,600 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துகொடுத்து மூலிகை பெட்ரோல் உற்பத்திசெய்ய அனுமதி அளித்துள்ளதால் வரும் 10ஆம் தேதிமுதல் உற்பத்தியை தொடங்குகிறோம். மூலிகை பெட்ரோல் குறித்து தவறான தகவலைப் பரப்பிவருகின்றனர்.

மூலிகை எரிபொருள்கள் குறித்து என் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையினர் போதிய ஆதாரத்தை நிரூபிக்க இயலாத நிலையில் நீதிமன்றம் என்னை விடுவித்தது. இந்நிலையில், மத்திய புலனாய்வுத் துறை என் கண்டுபிடிப்பு குறித்து தவறான தகவலைப் பரப்பிவருகிறது.

மேலும், லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சனையைத் தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்த நிலையில் சாதாரண டீசலைவிட உயிரி டீசல் வீரியம் மிக்கது என ராணுவத்தினர் ஒப்புகொண்டுள்ளனர்.

வரும் 9ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் மூலிகை பெட்ரோலை உருவாக்கி காட்டவுள்ளோம். ஆடிட்டர் குருமூர்த்தி உதவுவதாகச் சொல்லிய நிலையில் மூலிகை எரிபொருள்களைத் தயாரிக்க தொடங்கினேன். சிபிஐ தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக குரூமூர்த்தியே கூறியுள்ளார். என்னுடைய மூலிகை பெட்ரோலில கெமிக்கல் கலக்கவில்லை என்பதை நீதிமன்றமே ஒத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவை முன்னேற்ற உயிரி பெட்ரோல் தயாரிப்பைத் தவிர வேறு வழியில்லை. கேரளாவில் 77 பகுதிகளில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியைத் தொடங்கவுள்ளோம். தமிழ்நாட்டில் உயிரி பெட்ரோல் தயாரிப்பது குறித்து முதலமைச்சரிடம் அனுமதி கேட்கவுள்ளோம். எனது கண்டுபிடிப்பிற்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது. மத்திய அமைச்சர்கள் சிலர் தடுக்கின்றனர்.

என்னுடைய தயாரிப்பை முடக்க நினைப்பவர் யார் என்பது குருமூர்த்திக்குத் தெரியும். மூலிகை எரிபொருள்களை கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை 39 ரூபாய்க்கு கொடுப்போம். உயிரி கேஸ் 16 லிட்டர் ரூ. 250-க்கு வழங்கவுள்ளோம். தமிழ்நாட்டில் தயாரிக்கும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 'சித்த மருத்துவத்தை அழிக்கும் எண்ணத்தோடு ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.