தமிழ்நாட்டின் நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த வாரம் டெல்லியில் அறிவித்தார்.
அதன்படி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள், இளம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் ஏராளமான இளம் வாக்காளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பாக சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதன்மை கல்வி அலுவலக சுற்று சுவர் இடிந்து விபத்து - வாகனங்கள் சேதம்