மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை பொங்கலை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முறையாக நடத்துவது குறித்தும் விழாவிற்கு இரண்டு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டது தொடர்பாகவும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தென்கால் பாசன விவசாயிகள், அவனியாபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் காவல்துறை உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல்துறை ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தென்கால் பாசன விவசாயிகள், கிராம மக்கள் என இருதரப்பினரும் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த கமிட்டியே, வரும் 28ஆம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கணக்கெடுக்கும் பணி - இணையத்தில் பதிவேற்றம்